ரூ. 22.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 22 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 22 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 17 ஆயிரத்து 612 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 125.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 119.89-க்கும், சராசரியாக ரூ. 122.89-க்கும் ஏலம்போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 117.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.99-க்கும், சராசரியாக ரூ. 116.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 21 லட்சத்து 48 ஆயிரத்து 664-க்கு ஏலம் போனது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 18 ஆயிரத்து 200 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.125.62-க்கும், குறைந்தபட்சமாக ரூ.119.29 க்கும், சராசரியாக ரூ.124.19-க்கும் ஏலம்போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 117.99 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 99.99-க்கும், சராசரியாக ரூ. 116.99-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 22 லட்சத்து 20 ஆயிரத்து 400 க்கு கொப்பரை ஏலம்போனது.
Advertisement