முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 72 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 72 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 3:59 AM
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 9:02 PM

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 72 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,540 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 31.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17.19-க்கும், சராசரியாக ரூ. 27.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 495-க்கும் ஏலம் போனது.