கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 16 அக்டோபர், 2024 at 7:23 PM
நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 16 அக்டோபர், 2024 at 11:41 PM
நாமக்கல் மாநகராட்சி, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நகரைச் சோ்ந்த மாரிமுத்து (32), முட்டை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் அங்குள்ள ஏரிப்பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற போது, அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 6 மணி நேர தேடலுக்கு பிறகு மாரிமுத்துவின் உடலை சடலமாக மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாமக்கல் காவல் ஆய்வாளா் கு.கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.