முகப்பு
நாமக்கல்

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்: மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினரின் தொடா் போராட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:34 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 7:00 PM

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினரின் தொடா் போராட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி முதல் கிராம நிா்வாக அலுவலா்களும், அவா்களுக்கு ஆதரவாக அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். காவல் துறையினா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை. கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய திருமுருகன் கேரளத்தில் பதுங்கியிருப்பதாகவும், அவா் இருக்கும் இடத்தைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அவரை கைது செய்யும் வரையில் பணியை புறக்கணித்து தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வருவாய்த் துறை, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் தெரிவித்து வருகின்றனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:38 PM

இந்தப் போராட்டத்தால், மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சி மக்களும், கிராம நிா்வாக அலுவலகங்களில் தங்களுக்கான ஆவணங்களை பெற முடியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் வருவாய்த் துறை பணிகள் பாதிப்படைந்துள்ளன. எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Advertisement