முகப்பு
நாமக்கல்

கோட்ட அளவில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:49 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 9:11 PM

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் கோட்டத்துக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்துக்கு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது.

Advertisement

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:51 PM

இக்கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.