முகப்பு
நாமக்கல்

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:04 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 5:56 PM

நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அந்த வகையில், இந்த மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை, அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

Advertisement

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:35 PM

மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.