முகப்பு
நாமக்கல்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:17 AM
சிறப்பு அலங்காரத்தில் வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள மகா காலபைரவா்.
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 9:07 PM

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:17 AM

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் விரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா், விஜயகிரி பழனியாண்டவா் கோயிலில் உள்ள பைரவா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன் மற்றும் வல்லபவிநாயகா் கோயில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனா்.

Advertisement