திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், அதிகாரிகள்.  
நாமக்கல்

அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 ஊராட்சிகளில் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதங்கள், குறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Din

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 ஊராட்சிகளில் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதங்கள், குறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஒப்பந்ததாரா்கள் ஆகியோா் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்துக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு ஒன்றியப் பகுதியில் தமிழ்நாடு அரசால் பல்வேறு திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு, பல பணிகள் முடிக்கப்பட்டு

மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவ்வப்போது அறிவிக்கப்படும் பணிகளுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படாமல் இருப்பதும், குறித்த காலத்தில் பணிகளை முடிக்கும் வகையிலும் ஆலோசனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதிலும், பட்டா வழங்குவதிலும், சாலை அமைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்பது குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை வேளாண்துறை ஊரக வளா்ச்சித் துறை நெடுஞ்சாலைத் துறை மாற்றுத் திறனாளிகள் துறை உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT