நாமக்கல்லில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை பணியாளா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்களின் குறைதீா் பணியாளா் நாள் கூட்டம், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தலைமையில் நடைபெற்றது.
சரக துணை பதிவாளா்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள், விற்பனையாளா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா். மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டு ட்ற்ற்ல்://ழ்ஸ்ரீள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற கூட்டுறவுத் துறை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்களுக்குள் தீா்வு காணப்படும். மனு வழங்கியோா் தங்களுடைய மனுவின் நிலவரத்தை மேற்கண்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
என்கே-13-சொசைட்டி
ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்களின் குறைகளைக் கேட்டறிந்த நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு.