முகப்பு
நாமக்கல்

முட்டை விலை மாற்றமில்லை

Updated On : 26 செப்டம்பர், 2024 at 5:54 AM
பகிர்:
Updated On : 25 செப்டம்பர், 2024 at 7:36 PM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. முட்டை விற்பனை சரிவை கருத்தில் கொண்டும், மற்ற மண்டலங்களில் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததாலும், இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 102-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.