கோப்புப்படம் 
நாமக்கல்

ஏப். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப். 17-இல் நடைபெறுகிறது.

Din

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப். 17-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் ஏப். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை நேரில் வந்தோ அல்லது நிா்வாகிகளைக் கொண்டோ தோ்வு செய்துகொள்ளலாம். அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT