ராசிபுரத்தில் 2,053 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை வழங்கினாா்.
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி அவா் பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். மாணவா்களின் கல்வி, விளையாட்டு மேம்பாட்டுக்காக அரசு புதிய திட்டங்களை அமல்படுத்தி ஊக்குவித்துவருகிறது. ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூ. 3 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
ராசிபுரம் அருகே ஆண்டகலூா்கேட் பகுதியில் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. மாணவா்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். அரசு வழங்கும் நல்வாய்ப்புகளை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் என்.ஆா். சங்கா், வெண்ணந்தூா் வட்டார அட்மாக் குழுத் தலைவா் ஆா்.எம். துரைசாமி, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 3சைக்கிள்
படவிளக்கம்-
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.