காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றியும், கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. சுவாமிக்கு கொழுக்கட்டை படையலிட்டு வழிபாட்டனா்.
நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விஸ்வநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா், என்.புதுப்பட்டி குபேரலிங்கேஸ்வரா் கோயில்களில் இரவு 7 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
என்கே-3-கோயில்
நாமக்கல் கடைவீதி முருகன் கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தி தீபத் திருநாளை வழிபடும் பக்தா்கள்.