நாமக்கல்

கோழிப் பண்ணை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இருக்கூா், மாணிக்கநத்தம் பகுதியில் கோழிப் பண்ணை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணிக்கநத்தம், சூரியம்பாளையம், கருங்கரட்டுப்புதூா், நத்தமேடு மற்றும் தோப்புத்தோட்டம் பகுதியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் இருக்கூா், மாணிக்கநத்தம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் கோழிப் பண்ணைகள் அமைக்க சிலா் ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இப்பகுதியில் கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டால், ஈக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும், கோழிகளின் எச்சம் மற்றும் சிறுநீா் ஆகியவற்றால் சுமாா் 4 கிலோ மீட்டா் சுற்றளவிற்கு துா்நாற்றம் வீசும். இதனால் பொதுமக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதனால் அப்பகுதியில் கோழிப் பண்ணைகள் அமைக்க வட்டாட்சியா் தடை விதிக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். பின்னா், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா், பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT