நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 8.78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Syndication

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8 லட்சத்து 78 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, இருக்கூா், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 830 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 215.91க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 197.89க்கும், சராசரியாக கிலோ ரூ. 212.10க்கும் விற்பனையானது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 725 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 216.90க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 180.99 க்கும், சராசரியாக கிலோ ரூ. 207.99 க்கும் ஏலம்போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 178.99 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 80.90க்கும், சராசரியாக கிலோ ரூ. 142.99க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 78 ஆயிரத்து 802க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT