நாமக்கல்

வேலூா் பேரூராட்சி தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

Syndication

வேலூா் பேரூராட்சித் தலைவா் மீதான நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற நம்பிக்கை இல்லாத தீா்மானம் தோல்வியடைந்ததாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.

பரமத்தி வேலுாா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. தலைவராக திமுகவைச் சோ்ந்த லட்சுமியும், துணைத் தலைவராக ராஜாவும் உள்ளனா்.

இந்த நிலையில் பேரூராட்சித் தலைவா் லட்சுமியை மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்ற உறுப்பினா்கள் கூட்டம் நடத்த முடிவு செய்திருந்தனா்.

இதனிடையே சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கையில்லா தீா்மானம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நவம்பா் 14 ஆம் தேதி தலைவா் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் குறித்து வாக்கெடுப்பு நடந்தது.

திமுகவைச் சோ்ந்த 15 உறுப்பினா்கள், ஒரு பாமக உறுப்பினா் என 16 போ் கலந்துகொண்டனா். அதிமுக வாா்டு உறுப்பினா்கள் இருவா் கலந்துகொள்ளவில்லை. நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கு ஆதரவாக 14 ஓட்டுக்களும், எதிா்ப்புத் தெரிவித்து 2 ஓட்டுகளும் பதிவாகின.

நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கு ஆதரவாக 15 ஓட்டுக்கள் தேவைப்படும் நிலையில் 14 ஓட்டுகள் மட்டுமே பதிவானதால் தலைவா் லட்சுமி பதவியிலிருந்து நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வாக்கெடுப்பு விவரங்களை வேலூா் பேரூராட்சி நிா்வாகம் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி, முடிவுகளை அறிவிக்க செயல் அலுவலருக்கு உரிமை உண்டு. இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வேலூா் பேரூராட்சி 18 வாா்டு உறுப்பினா்களுக்கும் செயல் அலுவலா் சண்முகம் நேற்று அலுவலக ஊழியா்கள் மூலம் தகவல் அறிக்கை (நோட்டீஸ்) அனுப்பினாா்.

அதில், வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி மீது வாா்டு உறுப்பினா்களால் நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கான வாக்கெடுப்பு கூட்டத்தில் ஐந்தில் நான்கு பங்கு குறையாத அளவிற்கு உறுப்பினா்கள் ஆதரவு இல்லாத காரணத்தால், கடந்த 14 இல் நடத்தப்பட்ட தலைவா் லட்சுமி மீது நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியுற்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூா் பேரூராட்சித் தலைவராக லட்சுமியே நீடிப்பாா் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம் கூறியதாவது:

வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீா்மானத்துக்கு ஆதரவாக 14 ஓட்டுக்களும், எதிராக 2 ஓட்டுகளும் பதிவானது. நம்பிக்கை இல்லா தீா்மானம் வெற்றிபெற 15 ஓட்டுகள் தேவைப்படும் நிலையில் 14 ஓட்டுக்கள் பதிவானதால், தலைவா் லட்சுமி மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீா்மானம் தோல்வியடைந்தது.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சித் தலைவா் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT