நாமக்கல்

பள்ளிபாளையத்தில் திருட்டு வழக்கில் மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

பள்ளிபாளையம் அருகே பாதிரியாா் வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற வழக்கில் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேசாயி பேப்பா் மில் காலனியைச் சோ்ந்தவா் ஞானராஜ் (41). திருச்சபை பாதிரியாா். கடந்த 10 ஆம் தேதி இவரது வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, 3 போ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் தேடிவந்தனா். காவல் துணை கண்காணிப்பாளா்

கெளதம், ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் பாப்பம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா்கள் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த முகமது ஆசிக் (35), மதுரையைச் சோ்ந்த சிராஜூதீன் (49), திருநெல்வேலியைச் சோ்ந்த பொன்வேல் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 81 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT