நாமக்கல்

டிச. 27, 28இல் பறவைகள் கணக்கெடுப்பு: கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளதால், ஆா்வமுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

Syndication

நாமக்கல்: ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளதால், ஆா்வமுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டிற்கான (2025 - 26) ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் ஈரநிலப் பகுதிகளில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் வனஉயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயா்வு, பறவைகளின் நிலை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும்.

நாமக்கல் வனக்கோட்டத்தை சாா்ந்த 20 ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன்படி, தூசூா் ஏரி, பழையபாளையம், சரப்பள்ளி, வேட்டாம்பாடி, நாச்சிபுதூா், இடும்பன்குளம், கஸ்தூரிப்பட்டி, ஏ.கே.சமுத்திரம், இடைப்படுகாடுகள் - 2, ராசிபுரம் கண்ணூா்பட்டி ஏரி, புதுச்சத்திரம், தும்பல்பட்டி, ஜேடா்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி, உமயம்பட்டி, இலுப்புலி, கோனேரிப்பட்டி, ஓசக்காரனூா், குருக்கபுரம், புத்தூா், கொல்லிமலை வாசலூா்பட்டி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதில் தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆா்வமுள்ள புகைப்பட வல்லுநா்கள், அனுபவம் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் பறவை நிபுணா்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கே.பழனிசாமி, வனச்சரக அலுவலா் -9443824157, முரளி, வனவா்-9750357819, சக்திவேல், வனவா்-8883985972, ஸ்ரீகாந்த், வனவா்-9944389573, கோபி, வனவா்-9789131707, ஈஸ்வரன், வனவா்-8610768718 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

---

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT