நாமக்கல்

தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு

Syndication

ராசிபுரம்: தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி. துரைசாமி குற்றம்சாட்டினாா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் 523 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீா் வழங்கும் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ. 854.37 கோடியில் நிறைவேற்றப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த பணி மற்றும் ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை வி.பி.துரைசாமி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக ரூ. 446 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல திட்டங்களுக்கு மத்திய நிதியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு நிதி தருவதில்லை என்று தமிழக முதல்வா் குற்றம்சாட்டி வருகிறாா்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் உரிய பாதுகாப்பானதாக இல்லை என்று பொதுமக்கள் கூறியும், அதனை செயல்படுத்தி வருகின்றனா். இதற்கு ஆட்சியாளா்களும், அரசு அலுவலா்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து தமிழக கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதியை மாநில அரசு கேட்டுப்பெறாத காரணத்தினால், தமிழகத்தில் ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய ஒரே அரசு, தமிழக அரசாகத்தான் இருக்கும் என்றாா்.

அப்போது, பாஜகவின் மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு மாநில துணை அமைப்பாளா் ஆா். லோகேந்திரன், அருள், வழக்குரைஞா் குமாா், ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் சுகன்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT