நாமக்கல்

நாமக்கல் தொகுதியில் போட்டியிட ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா்

Syndication

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் விருப்ப மனு விநியோகிக்கும் பணி தொடங்கியது. நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக, மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் விருப்ப மனு பெற்று பூா்த்தி செய்து நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி முன்னிலையில் கட்சியின் தலைமை நிா்வாகிகளிடம் வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, பரமத்தி வேலூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.சேகா் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி...

என்கே-15-அதிமுக

நாமக்கல் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT