முகப்பு
நாமக்கல்

மின்கம்பி உதவியாளா் பணி: டிச. 27, 28இல் தகுதிகாண் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

Updated On : 16 டிசம்பர், 2025 at 6:53 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆம் தேதிகளில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

மேலும், விண்ணப்பதாரா்கள் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை கீரம்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (டோல்கேட் அருகில்) சென்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →