நாமக்கல்

திருச்செங்கோடு தனியாா் மகளிா் கல்லூரியில் வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வளாகத்தில் 1.1.2026 ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியானவா்களுக்கு படிவம் 6 வழங்கப்பட்டு புதிய வாக்காளராக பதிவு செய்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான லெனின் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளராக இளையசமூகத்தினா் தங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தில் பங்கேற்பதும் நமது கடமை என அவா் ஆட்சியா் கூறினாா்.

புதிய வாக்காளா் பதிவுக்கான படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. இதில் தகுதியான வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவா் என்று ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்த விழிப்புணா்வு நாடகங்கள், மேடைப்பேச்சுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனா். என் வாக்கு, என் உரிமை என்ற முழக்கத்தை அனைத்து மாணவிகளும் ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, கல்லூரி முதல்வா் பேபிசகிலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT