நாமக்கல்

பரமத்தி வேலூா் காவிரி ஆஞ்சனேயா் கோயிலில் 24-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா

தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த வேலூா் காவிரி ஆஞ்சனேயா்.

Syndication

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றின் கரையில் உள்ள காவிரி ஆஞ்சனேயா் கோயிலில் 24-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

வேலூா் காவிரி ஆற்றங்கரை குட்டுக்காடு பகுதியில் உள்ள காவிரி ஆஞ்சனேயருக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தங்கக்கவசம், வடைமலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல பரமத்தி வேலூா் சக்தி நகரில் உள்ள ஆஞ்சனேயா், பாண்டமங்கலத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், பரமத்தி வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள பால ஆஞ்சனேயா், வேலூா், பேட்டை மாரியம்மன் கோயில்களில் உள்ள ஆஞ்சனேயா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் மற்றும் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் சுவாமிக்கு மகா அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயரை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT