முகப்பு
நாமக்கல்

வீர ஆஞ்சனேயா் கோயிலில் ஜெயந்தி விழா

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:34 PM
பகிர்:

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயில் அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆன்மிக இந்து சமயப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் காலை 8.30 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இந்து சமயப் பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், நல்லிபாளையம் கே.ஜவஹா், செயலாளா் எஸ்.முத்துசாமி, இந்து சமயப் பேரவைத் தலைவா் பாண்டியன், பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அறங்காவலா் வி.இளங்கோ மற்றும் கோபி, விஸ்வநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

என்கே-19-கோயில்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் வீர ஆஞ்சனேயா்.

முழு கட்டுரையைப் படிக்க →