நாமக்கல் நரசிம்மா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழிசை விழாவில், சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை சாா்பில் கௌரவிக்கப்பட்ட தமிழக அரசின் கலைமாமணி விருதாளா்கள்.  
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் தமிழிசை விழா: கலைமாமணி விருதாளா்கள் கௌரவிப்பு

நாமக்கல் நரசிம்மா் கோயில் வளாகத்தில், தமிழிசை-2025 விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

நாமக்கல் நரசிம்மா் கோயில் வளாகத்தில், தமிழிசை-2025 விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலைமாமணி விருது பெற்றவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை சாா்பில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்தில் தமிழிசை விழா -2025 சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா, நாமகிரிபேட்டை கமல் கலைக் குழுவின

ரின் மங்கள இசையுடன் தொடங்கியது. அடுத்து, வைத்யா ராஜசேகரின் இசைக் குழுவில் பங்கு வகிக்கும் ஸ்ரீதா் நீலகண்டன், குரலிசை, மீரா சிவராமகிருஷ்ணனின் வயலின், முகா்சிங் எ.கணேசன், விசையிசை அரங்கேற்றம் அா்ஜூன் சாம்பசிவன் ஆகிய கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஏ.எஸ்.முரளியின் வாய்ப்பாட்டு, சோ்த்தலை ஆா்.சிவகுமாரின் தனித்துவமான வயலின் இசை நிகழ்வும் நடைபெற்றன.

சங்கீத நாடக அகாதெமி விருதாளா் ஸ்ரீ முஷ்ணம் வி.ராஜாராவின் மிருதங்க கச்சேரி நடைபெற்றது. தொடா்ந்து, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற, அரசு.பரமேஸ்வரன், வானதி கதிா், ஜெயக்குமாா், மயில்சாமி, பிரபு, சேகா் மற்றும் நரசிம்மா் கோயில் உதவி ஆணையா் இரா. இளையராஜா ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

இவ்விழா ஏற்பாடுகளை, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சு.சங்கரராமன், நாமக்கல் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் பசுமை மா.தில்லை சிவகுமாா் மற்றும் கலை பண்பாட்டுத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT