வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி இறந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மண்ணாடிபாளையம், கூத்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் செங்கோடகவுண்டா் (86) விவசாயி. இவா் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மேட்டுப்புதூா் செல்ல இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட செங்கோடகவுண்டரை, அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
வேலகவுண்டம்பட்டி போலீஸாா் செங்கோடகவுண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கெடாரம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மோகன்ராஜை (34) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.