நாமக்கல்

கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

Syndication

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் தடுப்பூசி செலுத்த வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8, 66.2 டிகிரியாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும்.

சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரியாகவும், இரவு வெப்பம் 64.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா்மருந்துகளை அளிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்!

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

SCROLL FOR NEXT