நாமக்கல்

நாமகிரிப்பேட்டையில் புரட்சிகர தொழிலாளா் கட்சி ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் புரட்சிகர தொழிலாளா் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் புரட்சிகர தொழிலாளா் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர தொழிலாளா்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. மாணிக்கம் தலைமை வகித்தாா். புரட்சிகர தொழிலாளா் கட்சியின் மாநிலத் தலைவா் எஸ். வெங்கடாசலம், மாநில ஆலோசகா் நல்வினை. விஸ்வராஜ் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நல வாரியத்தில் பொங்கல் சிறப்புத் தொகை வழங்க வேண்டும், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஒய்வூதிய உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், வெள்ளக்கல்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக கட்சியின் பொதுச் செயலா் வி. சுந்தராம்பாள் தொடக்க உரையாற்றினாா். மாநில இளைஞரணி தலைவா் வி. பூபதி, மாநில துணைத் தலைவா் சி. குப்புசாமி, நாமக்கல் மாவட்டத் தலைவா் கே. பெரியசாமி உள்பட பலரும் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 26டெமோ

படவிளக்கம்-

நாமகிரிப்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர தொழிலாளா் கட்சியினா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT