குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளிபாளையம் அருகே உள்ள பூலகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமு. தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி அபிநயா (30). இவா் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் சேலையால் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டாா்.
இதைக் கண்ட குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அபிநயா இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].