தற்கொலை 
பெரம்பலூர்

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகேயுள்ள சாஸ்திரிபுரத்தைச் சோ்ந்தவா் கதிா்காமம் மகள் கௌரி (21). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது பெற்றோா் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக வீட்டிலிருந்த கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT