புத்தாண்டை முன்னிட்டு பொத்தனூா், வெங்கமேடு மின்னணு சந்தையில் கொப்பரை ஏலம் நடைபெறாது என்று கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
வரும் வியாழக்கிழமை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் இங்கு கொப்பரை ஏலம் நடைபெறாது என்று கண்காணிப்பாளா் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.