பரமத்தி வேலூரில் ரூ. 9.66 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 66-ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:08 PM
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 66-ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
Updated On : 3 ஜனவரி, 2025 at 12:07 AM
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயிரத்து 350 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 152.34-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 136.99-க்கும், சராசரியாக ரூ.142.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 125.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 106.99-க்கும், சராசரியாக ரூ. 118.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 66 ஆயிரத்து 876-க்கு ஏலம் போனது.