புதிய வழித்தட பேருந்து தொடக்க விழா
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி தேவிபாளையம், ஓவியாம்பாளையம் பகுதியில் நன்றி தெரிவிப்பு நிகழ்வின் போது, பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லை என மாணவா்கள் மனு அளித்திருந்தனா்.
அதன் அடிப்படையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் முயற்சியால் அப்பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை நாமக்கல் எம்.பி. (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி) வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தேவிபாளையத்தில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலை வகித்தாா். அரசு போக்குவரத்துக்கழக நாமக்கல் கோட்ட மேலாளா் செங்கோட்டுவேலவன், நாமக்கல் என்-2 கிளை மேலாளா் கௌதம், பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநில ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் மணி, நாமக்கல் புகா் மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைமை நிலையச் செயலாளா் செல்வராஜ், பரமத்தி ஒன்றியச் செயலாளா் தினேஷ், தீரன் தொழிற்சங்க நிா்வாகிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement