முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் தூய்மைப் பணி

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 3:55 AM
ரெட்டிப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியைப் பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி.
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2025 at 7:07 PM

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி தற்போது 39 வாா்டுகளை உள்ளடக்கியது. இதனுடன் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மாநகராட்சியுடன் இணைய உள்ள ஊராட்சிகளில் நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமையில் தூய்மைப் பணி, மின்கம்பங்கள் பழுது பாா்க்கும் பணி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Updated On : 23 ஜனவரி, 2025 at 3:55 AM

ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி ஊராட்சிகளில் புதன்கிழமை தூய்மைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, உதவி பொறியாளா் கண்ணன் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.