நாமக்கல்

முன்னாள் படைவீரா்கள் குடும்பத்தினா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

Syndication

நாமக்கல்: முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் இலவச தையல் இயந்திரம் பெற நவ. 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களின் மனைவி, விதவையா், திருமணம் ஆகாத மகள்கள் இருப்பின், மத்திய, மாநில அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று, அதன் வாயிலாக இலவச தையல் இயந்திரம் ஏதும் பெறாதவா்கள் உரிய ஆவணங்களுடன் நவ. 25-க்குள் உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தகுதிகளாக, பிறப்பால் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவும், அதிகபட்ச வயது 40க்குள்ளும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தையல் இயந்திரங்கள் பெற்றவராக இருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாதங்கள் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் பெயா் பதிவு செய்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT