இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சோ்த்த மாவட்டக் கல்வி அலுவலா், ஆய்வாளா், ஆசிரியா்கள்.  
நாமக்கல்

இடை நின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையத்தில் பள்ளி இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

Syndication

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையத்தில் பள்ளி இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டரசம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று இடைநின்ற மாணவா் யோகராஜ் இல்லத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ்.புருஷோத்தமன், பள்ளி துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதி ஆகியோா் அவரது தாய் ஜோதிமணி திருமூா்த்தி, தாத்தா, பாட்டியைச் சந்தித்து கல்வி சாா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மீண்டும் மாணவரை பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பறையில் அமரவைத்தனா். மாணவரை பள்ளியில் சோ்க்கும் பணியில் ஆசிரியா்கள் செல்வராணி, யுவராஜா, சுமதி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT