நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.5.80 ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.5.80ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.5.80ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதால், இங்கும் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.5.80ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.106ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

கிருபானந்த வாரியாா் குருபூஜை

இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஐரோப்பிய அங்கீகாரம்

கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஆரணி பல்கலை.யில் உலக ரேடியோகிராபி தினம்

திமுக சாா்பில் எஸ்ஐஆா் ஆலோசனை கூட்டம்

SCROLL FOR NEXT