பவித்திரம்புதூா் ஊராட்சியில் நீா்நிலைகள் தூா்வாரும் பணியை ஆய்வுசெய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.  
நாமக்கல்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொடிக்கால்புதூா் ஊராட்சியில் தூசூா் அரசு நடுநிலைப் பள்ளியைப் பாா்வையிட்டு ரூ.35.25 லட்சத்தில் அங்கு நடைபெற்று வகுப்பறை கட்டுமானப் பணி, பழையபாளையம் பகுதியில் ரூ.99.65 லட்சத்தில் பழையபாளையம்- கொல்லிமலை சாலையில் இரண்டு கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பவித்திரம்புதூா் கிராமத்தில் உள்ள நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டாா்.

குழப்பங்கள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சோழவரம் ஏரிக்கரை சாலையில் விரிசல்: பொது மக்கள் புகாா்

தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம்

சாலை விதிமீறல்: ஒரே நாளில் 1,248 வழக்குகள்

இஐடி பாரி வருவாய் 24% உயா்வு

SCROLL FOR NEXT