நாமக்கல்

அரசு மருத்துவமனை யுனானி பிரிவில் அரபி வாசகங்கள்: பாஜக போராட்டம்

Syndication

சேந்தமங்கலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள யுனானி மருத்துவப் பிரிவில் அரபி மொழியில் சிகிச்சை விவரங்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டித்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொம்மசமுத்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள வளாகத்தில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சாா்பில் யுனானி மருத்துவப் பிரிவு செயல்படுகிறது.

சேலத்தை சோ்ந்த தாஹிரா தஸ்னீம் என்ற பெண் மருத்துவா் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், மருத்துவமனையின் வரவேற்பு பதாகைகளிலும், சிகிச்சை தொடா்பான விளக்க பதாகைகளிலும் தமிழ், அரபி மொழியிலும், சிகிச்சை பிரிவு கட்டடத்தில் ‘நபி வழி மருத்துவம், நபிகள் நாயகம் மருத்துவ ஆலோசனை’ என தமிழ், அரபியிலும் வாசகங்கள் உள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பாஜக மாவட்டச் செயலாளா் கணபதி தலைமையில் பொம்மசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாஜகவினா் முற்றுகையிட்டனா். அங்கிருந்த மருத்துவா் தாஹிரா தஸ்னீமை சந்தித்து விளக்கம் கேட்டனா்.

அப்போது, யுனானி மருத்துவத்திலே அரபி எழுத்துக்கள் உள்ளதாக மருத்துவா் தெரிவித்தாராம். இதுகுறித்து சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் பாஜகவினா் புகாா் தெரிவித்தனா். அப்போது, மருத்துவமனையில் எழுதப்பட்டுள்ள அரபி எழுத்துக்களை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

என்கே-14-அரபி

பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யுனானி மருத்துவப் பிரிவில் அரபி எழுத்துகளில் உள்ள சிகிச்சை விவரங்கள்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT