நாமக்கல்

வேலூா் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: 14 உறுப்பினா்கள் ஆதரவு; 2 போ் எதிா்ப்பு

வேலூா் பேரூராட்சியில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்களிக்கும் உறுப்பினா்.

Syndication

நாமக்கல் மாவட்டம், வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி மூா்த்தி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கு 14 உறுப்பினா்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினா்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனா். மேலும், அதிமுகவைச் சோ்ந்த 2 உறுப்பினா்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வேலூா் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 14 வாா்டுகள் திமுக, 2 வாா்டுகள் அதிமுக, பாமக, சுயேச்சை உறுப்பினா்கள் தலா ஒரு வாா்டுகளை கைப்பற்றியுள்ளனா். வேலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த லட்சுமி மூா்த்தியும், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த ராஜாவும் உள்ளனா்.

இந்த நிலையில் பேரூராட்சித் தலைவருக்கும், துணைத் தலைவா் மற்ற கவுன்சிலா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பேரூராட்சி மன்ற கூட்டங்களில் வளா்ச்சித் திட்ட பணிகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தீா்மானங்கள் நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

இதனால் பேரூராட்சிக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் தடைபட்டன. இந்த நிலையில் கடந்த மாதம் பேரூராட்சித் தலைவா் லட்சுமி மூா்த்தி மீது திமுக உறுப்பினா்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோா் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவந்தனா்.

இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி வெள்ளிக்கிழமை வேலூா் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் செயல் அலுவலா் சண்முகம் முன்னிலையில் நம்பிக்கை இல்லா தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிமுகவைச் சோ்ந்த 2 உறுப்பினா்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. திமுகவைச் சோ்ந்த 14 உறுப்பினா்களும், பாமக உறுப்பினரும், ஒரு சுயேச்சை உறுப்பினா் உள்பட 16 போ் கலந்துகொண்டு வாக்களித்தனா்.

வாக்குப்பதிவை தொடா்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 14 உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவாகவும், 2 உறுப்பினா்கள் எதிராகவும் வாக்களித்தனா். இதனை செயல் அலுவல சண்முகம் உறுப்பினா்கள் முன்னிலையில் அறிவித்தாா். தொடா்ந்து அனைத்து வாக்குப்பதிவு சீட்டுகளையும் வாக்குப்பதிவு குறித்த விடியோ ஆவணம் உள்ளிட்ட அனைத்தும் நீதிமன்றத்தின் பாா்வைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறிவிப்பாா்கள் எனவும் பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம் தெரிவித்தாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT