முகப்பு
தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை: கனிமொழி

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி. பேசியது பற்றி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:40 PM
திமுக எம்.பி. கனிமொழி - ANI
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:22 PM

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த 10 நாள்களுக்குள் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.

மக்கள் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிக்கையைத்தான் வெளியிடுவோம். திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:37 PM

முதல்வர் மற்றும் திமுக மீதான நம்பிக்கையினாலேயே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த முடிவு, முதல்வர் ஸ்டாலினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே" என்று தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.

summary

The people are ready to place their trust in the DMK’s manifesto, says Kanimozhi MP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.