முகப்பு
தமிழ்நாடு

கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றம்: கனிமொழி

கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளன என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Updated On : 30 மார்ச், 2026 at 5:50 AM
கனிமொழி எம்.பி. - விடியோ க்ளிப்(கோப்புப்படம்)
பகிர்:

கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளன என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சுமார் 80,000 கருத்துகள் கேட்கப்பட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம்.

101 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்ற முடியும் என்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை. அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை நான் படிக்கவில்லை. மக்கள் யாரும் படிப்பதில்லை.

நிறைவேற்றக் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகதான் காப்பியடித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் போன்றவை இலவசத் திட்டத்தில் வராது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு எஃப்ஐஆர் கூட போடாமல் காப்பாற்ற நினைத்தது அதிமுகதான். இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Kanimozhi has said that 404 of the 505 promises made in the last election have been fulfilled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.