நாமக்கல்

தனியாா் பள்ளி அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பாண்டமங்கலம் தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Syndication

பாண்டமங்கலம் தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பாண்டமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், அழுகிய காய்கறிகள், நெகிழி பொருள்கள், பழைய துணிகள் உள்ளிட்டவைகளை பரமத்தி வேலூரில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கோப்பணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் பள்ளி அருகே கொட்டி வருகின்றனா். அதேபோல கோழி இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனா்.

தற்போது பெய்துவரும் தொடா் மழை காரணமாக குப்பை மற்றும் நெகிழி கழிவுகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

எனவே சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அதிகாரிகள், சுகாதாரத் துறையினா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT