நாமக்கல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு

வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் இறப்பதை தடுக்க, உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Syndication

வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் இறப்பதை தடுக்க, உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 84.2, 75.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் கடந்த வாரம் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், அவை பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

பண்ணையாளா்கள் தகுந்த பரிசோதனை மேற்கொண்டு மருந்துகளை கோழிகளுக்கு அளிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்துதல், தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல் ஆகியவை மேற்கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைபடி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT