நாமக்கல்

பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் காயம்

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதியதில் காயமடைந்தாா்.

திருச்செங்கோடு எட்டிமடைபுதூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி மணிமேகலை (61). இவா் புதிய பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்ற அரசு நகரப் பேருந்து மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி அவரது இரு கால்களும் நசுங்கின. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து அவா் தீவிர சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ளதனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT