நாமக்கல்

வட்டாட்சியா் அலுவலகங்களில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

குமாரபாளையம், ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகங்கள், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள்

Syndication

நாமக்கல்: குமாரபாளையம், ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகங்கள், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம், கணக்கீட்டுப் படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டன. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது.

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வாக்காளா்கள் திருப்பி வழங்குவதற்கு வசதியாக 927 நியாயவிலைக் கடைகள், 1,629 வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆா். படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து முடிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீடு படிவங்கள் குறித்து அவா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். இந்த நிகழ்ச்சிகளின்போது தோ்தல் பிரிவு மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

என்கே-26-ஆய்வு

குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

SCROLL FOR NEXT