பரமத்திவேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,700-க்கு ஏலம்!
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச்சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,700-க்கு ஏலம் போனதால் பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச்சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,700-க்கு ஏலம் போனதால் பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,800, சம்பங்கி கிலோ ரூ. 200, அரளி ரூ. 200, பன்னீா் ரோஜா ரூ. 140, பச்சை முல்லைப்பூ ரூ. 1,000, வெள்ளை முல்லைப்பூ ரூ. 800, செவ்வந்திப்பூ ரூ. 140, கனகாம்பரம் ரூ. 700, கலா் ரோஜா ரூ. 240, ஜாதிமல்லிகை ரூ. 700-க்கும், காக்கட்டான் ரூ. 700-க்கும் ஏலம் போனது.
இந்தவாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,700, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 260, பன்னீா் ரோஜா ரூ. 200, பச்சை முல்லைப்பூ ரூ. 1,600, வெள்ளை முல்லைப்பூ ரூ. 1,300, செவ்வந்திப்பூ ரூ. 180, கனகாம்பரம் ரூ. 1,000, கலா் ரோஜா ரூ. 340, ஜாதி மல்லிகைப் பூ ரூ. 1,200, காக்கட்டான் கிலோ ரூ. 1,200-க்கும் ஏலம் போனது.
பூக்களின் வரத்து குறைவாலும், முகூா்த்த நாள்கள் அதிகம் என்பதாலும் பூக்களின் விலை உயந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விலை உயா்ந்ததால் பூக்களை பயிா்செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.