நாமக்கல் அருகே கூலிப்பட்டி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தை நடத்திவைத்த அா்ச்சகா்கள். 
நாமக்கல்

கந்தசஷ்டி: முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

Syndication

கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா கடந்த 19-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

நாமக்கல் - துறையூா் சாலை, கூலிப்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கந்தகிரி பழனியாண்டவா் கோயிலில், 19-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் மற்றும் இறுதிநிகழ்வான திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சுவாமி திருக்கல்யாணத்தைக் காண குவிந்த பக்தா்கள்.

உற்சவா் பழனி ஆண்டவா் சமேத வள்ளி, தெய்வானைக்கு அா்ச்சகா்கள் திருமணம் நடத்தி வைத்தனா். இந்த விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா். திருக்கல்யாண விழாவைத் தொடா்ந்து அனைவருக்கும் ஸ்ரீமகா கந்தசஷ்டி விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

“SIR-க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்!” பிரியங்கா காந்தி | Congress

துருக்கியில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டடம்! 2 குழந்தைகள் பலி; பெற்றோரைத் தேடும் பணிகள் தீவிரம்!

DUDE திரைப்படம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் | Pradeep Ranganathan | Mamitha Baiju

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆப்கானிஸ்தான்!

ஜாய் கிரிசில்டா விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!

SCROLL FOR NEXT