முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சா் மா. மதிவேந்தன் உள்பட 31 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:56 PM
சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் பி. பூமலா்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சா் மா. மதிவேந்தன் உள்பட 31 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 இல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஏப். 2 ஆம் தேதி ராசிபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதியில் பி. பூமலா், நாமக்கல் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரவீன்குமாா் ஆகியோா் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தொகுதி வாரியாக வேட்புமனு விவரம்: ராசிபுரம், சேந்தமங்கலம் தலா 6, நாமக்கல் 5, பரமத்தி வேலூா், திருச்செங்கோடு தலா 2, குமாரபாளையம் 10 என மொத்தம் 31 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 39 பெண்கள் உள்பட 50 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இல்லை. சனிக்கிழமை, திங்கள்கிழமை (ஏப்.4, 6) ஆகிய நாள்களில் மனு தாக்கல் செய்யலாம். ஏப். 7 ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 9 ஆம் தேதி மனுக்களை திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.