முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:33 PM
- கோப்புப்படம்.
பகிர்:

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களுக்கு அவா் அளித்த வாக்குறுதி:

ஈரோடு, திருச்செங்கோடு நாமக்கல் வழியாக பெரம்பலூா் செல்ல ரயில் வசதி செய்யப்படும். திருமணிமுத்தாற்றை தூா்வாரி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரப்படும். பூலாம்பட்டி காவிரி குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தி கள்ளுப்படைத்திற்கு குடிநீா் வசதி ஏற்படுத்தப்படும்.

Advertisement

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, பேருந்து வசதி, கால்வாய் வசதி செய்யப்படும். மூளைப்பள்ளி ஆதிதிராவிடா் தெருவுக்கு இரண்டடுக்கு சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் எம்.பி. ஏ.கே.பி. சின்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவா் அன்புமணி, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சுரேஷ் தமிழ்மணி, மதிமுக மாவட்டச் செயலாளா் கணேசன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் செங்கோட்டுவேலு கண்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளா் கொங்கு கோமகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments